Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“தரமான சம்பவம் காத்திருக்கிறது”: ராயன் படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட காளிதாஸ் ஜெயராம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ராயன்.

தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் ஆக உருவாகி வரும் இந்த படத்தில் எஸ். ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது காளிதாஸ் ஜெயராம் ராயன் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

தனுஷ் சார் ரசிகர்களுக்கு ‘தரமான சம்பவம் காத்திருக்கிறது’. அந்த அளவிற்கு ராயன் திரைப்படம் சூப்பராக உருவாகி வருகிறது. கண்டிப்பாக படம் வேற லெவலில் இருக்கும்.

இது எனக்கு ஒரு கனவு. ஏனென்றால், கமல் சாரை எப்படி பார்த்தேனோ அப்படித்தான் தனுஷ் சாரையும் பார்க்கிறேன். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த திரைப்பட இயக்குனரும் கூட. அவரது இயக்கத்தில் அவருடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

Rayaan movie latest update viral
Rayaan movie latest update viral