மூத்த மகனின் பிறந்த நாளை மகன்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் ரவி மோகன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
படங்களில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் மறுபுறம் ரவி மோகன் அவரது மனைவியை விவாகரத்து செய்வதாகவும் அறிவித்திருந்தார் இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ரவி மோகனுக்கு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் தற்போது மூத்த மகனான ஆரவ் பிறந்த நாளை மகன்களுடன் கொண்டாடியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரவி மோகன் ஆரவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
