Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 67 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த பிரபல இயக்குனர்..வைரலாகும் பதிவு

rathnakumar-about-thalapathy-67 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வீட்டு திரைப்படத்தை தொடர்ந்து வாரிசு திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தை வம்சி இயக்குகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்கிறார். இந்த படம் பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் தளபதி 67 மேயாத மான் பட இயக்குனர் ரத்னகுமார் லோகேஷ் கனகராஜை சந்தித்துள்ளார்.

அப்போது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு 1 முதல் 9 வரை நம்பர்களை பதிவு செய்துள்ளார். அதில் ஆறு மற்றும் ஏழு அதாவது 67-க்கு பதிலாக பட்டாசு வெடிக்கும் எமோஜியை பதிவு செய்துள்ளார். இதனால் தளபதி 67 படத்தின் சூட்டிங் தீபாவளி முதல் தொடங்கலாம் அல்லது இந்த படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகலாம் என்பதை மறைமுகமாக இயக்குனர் சுட்டி காட்டுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.