Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆந்திராவில் வெளியாக போகும் “ரதி நிர்வேதம்” படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

rathi-nirvedam-re-releases-in-andhra-pradesh

மலையாளத்தில் 1978-ம் ஆண்டு நடிகை ஜெயபாரதி நடிப்பில் வாலிபர் ஒருவருக்கு தன்னைவிட வயதில் மூத்த பெண்ணுடன் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு ‘ரதி நிர்வேதம்’ படம் வெளியானது.அதே திரைப்படம் மீண்டும் 2011-ம் ஆண்டு நடிகை ஸ்வேதா மேனன் கவர்ச்சியில் மீண்டும் வெளியானது. இந்த திரைப்படம் மலையாளம் தெலுங்கு தமிழ் என தென்னிந்திய மொழிகளில் அதிக வசூலை குவித்தது.

இன்றளவும் இளைஞர்களின் மத்தியில் ‘ரதி நிர்வேதம்’ படத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது.இந்த நிலையில் ‘ரதி நிர்வேதம்’ படத்தை ஆந்திராவில் மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர். 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது. கேரளாவில் உள்ள திரையுலக ஆர்வலர்களும் படத்தை அந்த மாநிலத்தில் மீண்டும் வெளியிட எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.”,

rathi-nirvedam-re-releases-in-andhra-pradesh
rathi-nirvedam-re-releases-in-andhra-pradesh