Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.வைரலாகும் பதிவு

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ‘ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

அந்த போஸ்டரில், “சாத்தியமில்லாத எல்லாத்தையும் நீக்கிட்டா மிஞ்சிறது நம்ப முடியாத ஒன்னாருந்தாலும் அதான் உண்மை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.