Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த மாதிரி மூன்று படங்களில் நடிக்க ஆசை.. பேட்டியில் ரஷ்மிகா ஓபன் டாக்

rashmika-mandhana latest update

தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா சுல்தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மூன்று பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா அண்மையில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் தனக்கு மூன்று வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

அதாவது “ஒரு சரித்திர படம்”, “விளையாட்டு மையப்படுத்திய ஒரு படம்” மற்றும் “ஒரு வாழ்க்கை படத்தில்” நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இவரது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 rashmika-mandhana latest update

rashmika-mandhana latest update