சினிமாவில் இருந்து விலகுவது குறித்து ராஷ்மிகா பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து சுல்தான், வாரிசு, போன்ற சில படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் அவருக்கு காலில் அடிபட்டு இருந்ததன் காரணமாக நொண்டிக்கொண்டு நடந்து பட விழாக்களிலும் வெளியிலும் வந்திருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்நிலையில் ஹிந்தியில் நடித்துள்ள சாவா படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இந்தப் படத்தோடு நான் ஓய்வு பெற்றாலும் எனக்கு சந்தோஷம் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு ராஷ்மிகா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
