rashi-khanna-latest-interview
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தெலுங்கில் பிரபலமான இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை-3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய திரைப்படங்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார்.
தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் அண்மையில் அளிக்கப்பட்ட பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அத்துடன் தனது ஆசையையும் வெளிப்படையாக கூறி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
அப்பேட்டியில் அவர், ‘திரையுலகில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் பல சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது அவசியமாகும். இதனை நான் மேற்கொண்டு இருக்கும்போது இதற்கிடையில் திரைப்படங்களில் பாட வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் இருந்து வந்தது. அந்த வகையில் தெலுங்கில் ஒரு படத்தில் ஒரு பாடலை ஏற்கனவே பாடியிருந்தேன். அதேபோல் பிறமொழி படங்களிலும் பாட ஆசையாக காத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக எனக்குள் இருக்கும் திறமையை அனைவருக்கும் வெளிப்படுத்துவேன்’. என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ராஷி கண்ணாவிற்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறதா என்ற கேள்வியுடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…