Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமணம் குறித்து மனம் திறந்த ரம்யா பாண்டியன்

ramya-pandian-marriage-news

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொலைக்காட்சியின் மூலம் அனைவருக்கும் அதிக அளவில் பரிச்சயமானார். இதனைத் தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று இருந்த இவர் தற்போது சில படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் திருமணம் குறித்து மனம் திறந்து பதில் அளித்திருக்கும் ரம்யா பாண்டியனின் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் “நான் கண்டிப்பாக காதல் கல்யாணம் தான் செய்துகொள்வேன். தற்போது என் வாழ்க்கையில் யாருமில்லை. ஆகவே இப்போது நான் சிங்கிள் தான். ஒருவரை எனக்கு பிடிக்கவேண்டுமெனில், அவரது personality வைத்துதான் பிடிக்கும்” என அவர் கூறியுள்ளார்.

ramya-pandian-marriage-news
ramya-pandian-marriage-news