வீட்டிலேயே மகள் திருமணத்தை நடத்திய ரமேஷ் அரவிந்த்

கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் ரமேஷ் அரவிந்த், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என வெவ்வேறு மொழிகளில் 140 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, கேளடி கண்மணி, டூயட், சதிலீலாவதி, ஜோடி, ரிதம், பஞ்சதந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ், உத்தம வில்லன், என அவரது படங்களை பட்டியலிடலாம்.

இந்நிலையில் ரமேஷ் அரவிந்தின் மகளும், தயாரிப்பு மேலாளருமான நிஹாரிகாவின் திருமண கொண்டாட்ட விழா அவரது இல்லத்தில் ஒரு வார காலம் நடந்தது. இதையடுத்து டிஜிட்டல் வடிவமைப்பாளர் அக்‌ஷய் என்பவரை கரம் பிடித்திருக்கிறார் நிஹாரிகா. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

‘தொற்றுநோய் காலம் என்பதால் நாங்கள் நினைத்தபடி இந்தத் திருமணத்தை பெரிதாக நடத்த முடியவில்லை. அதனால் அதை சரி செய்ய, வெவ்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒரு வார கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டோம்’ என ரமேஷ் அரவிந்தின் மனைவி அர்ச்சனா இது பற்றி தெரிவித்துள்ளார்.

அதோடு திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் ரமேஷ், ‘மணமக்களுக்கு உங்களது ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

 

Suresh

Recent Posts

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

17 hours ago

Bison – Poison ? Ameer Speech Bison Thanks Meet

https://youtu.be/hvOcBNB9q5M?t=1

19 hours ago

Mari Selvaraj Speech Bison Thanks Meet

https://youtu.be/V8EF1lKofzs?t=1

19 hours ago

Pa Ranjith Speech Bison Thanks Meet

https://youtu.be/XH3vQluc4Eo?t=518

19 hours ago

Aaru Arivu Movie Audio Launch | Ambedkar | Thol Thirumavalavan

https://youtu.be/VRvtIfqauzI?t=7

19 hours ago

பைசன் : 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

20 hours ago