Is it true that Vijay starred in the film Lokesh Kanagaraj with an open mind
மாநகரம், கைதி படங்களை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி திரைக்கு வருகிறது.
கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்புகாக மாஸ்டர் படத்தின் சில காட்சிகளை விஜய் இயக்கியதாகவும், அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில், ‘விஜய் சார்தான் ஒரு நாள், ‘நீ எங்க எல்லாரையும் நடிக்கச் சொல்லி டார்ச்சர் பண்ற, நீயும் ஒரு சீன்ல நடிக்கணும்’னு சொன்னார். நானும் முதல்ல சும்மாதான் சொல்றார், அப்புறம் மறந்திடுவார்னு நினைச்சேன்.
கரெக்ட்டா கடைசி நாள் ஷூட்ல அதை ஞாபகம் வெச்சிருந்து, ஒரு சீனில் நடிக்கச் சொன்னார். நான் நடிக்கணும்னா, அந்த சீனை நீங்கதான் டைரக்ட் பண்ணணும்னு சொன்னேன். இப்படி சொன்னா விட்ருவாருன்னு நினைச்சேன் ஆனால், ‘பண்ணிட்டாப் போச்சு’ன்னார். அப்பறம் விஜய் சார் ஆக்ஷன், கட் சொல்லி நான் நடிச்சேன். என்று கூறியிருக்கிறார்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…