Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 66 படத்துக்கு வசனம் எழுதுவது யார் தெரியுமா? வெளியான சூப்பர் ஹிட் தகவல்…

Raju Murugan Joined in Thalapathy 66 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படம் முடிவதற்கு முன்பாகவே தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த படத்தில் பிரபல தமிழ் இயக்குனர் ராஜுமுருகன் இணைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக வம்சி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தோழா என்ற படத்தை இயக்கினார். கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் ராஜூமுருகன் தான். இதனால் இந்த கூட்டணி தற்போது தளபதி அறுபத்தி ஆறு படத்திலும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Raju Murugan Joined in Thalapathy 66 movie
Raju Murugan Joined in Thalapathy 66 movie