Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் குறித்து ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

rajinikanth-speech world-cup

“உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. மும்பையில் நடந்த அரையிறுதி போட்டியை நேரில் பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் விமானம் முலம் சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியதும், முதலில் பரபரப்பாக இருந்தது. இந்திய அணி வெற்றிக்கு முகமது ஷமி தான் காரணம். 100 சதவீதம் உலகக்கோப்பை நமதே.இவ்வாறு அவர் கூறினார்.”,

rajinikanth-speech world-cup
rajinikanth-speech world-cup