“ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்டது என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன்”: ரஜினிகாந்த்

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்- பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.முன்னதாக, ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்காக கோவிலின் அறகட்டளை சார்பில் முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில், அரசியல் முக்கிய தலைவர்கள் தவிர, ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை தந்தனர்.இந்நிலையில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முடிந்து வீடு திரும்பும்போது நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

rajinikanth-says-i-will-come-to-ram-temple
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

7 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

7 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

8 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

8 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

8 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

8 hours ago