தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும்,உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
சத்யராஜ்,ஸ்ருதிஹாசன், மகேந்திரன் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் நடிக்க ரஜினிகாந்த் 280 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகராக இருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இணையும் இந்த கூட்டணி ரசிகர்களுடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


