Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொங்கலுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த். வைரலாகும் தகவல்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினி காந்த் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை போயர்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி காந்த், “அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென இந்த நன்நாளில் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும்” எனக் கூறினார்.

Rajinikanth pongal wishes to all
Rajinikanth pongal wishes to all