Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனது ஸ்டைலில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினிகாந்த்

ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்வதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு ரசிகர்கள் திரண்டனர்.

இதையடுத்து இன்று காலை 9.30 மணி அளவில் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். மெயின் வாசல் அருகில் வீட்டுக்குள் நின்றபடியே அவர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

வெள்ளை நிற உடையில் காணப்பட்ட ரஜினிகாந்த் இரு கைகளையும் மேலே கூப்பி, தனது பாணியில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். “பறக்கும் முத்தம்” கொடுத்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் தலைவா… தலைவா… என்று கோஷமிட்டபடியே ரஜினிக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட ரஜினி கைகளை அசைத்த படியே சில நிமிடங்கள் நின்று புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் அவர் வீட்டுக்குள் சென்றார். இதன் பிறகு ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு இருந்து கலைந்து சென்றனர்.

Rajinikanth new year wishes to fans
Rajinikanth new year wishes to fans