'Rajinikanth is the reason I play the hero' on the show With Love, Abhishan Jeevind
‘ஹீரோவா நடிக்க காரணம் ரஜினிகாந்த்’ வித் லவ் நிகழ்ச்சியில் அபிஷன் ஜீவிந்த்
‘ஊக்குவிக்க ஆளிருந்தால், ஊக்கு விற்பவரும் தேக்கு விற்பார்’ என்பதுபோல ஓர் நிகழ்வு பார்ப்போம்.
சசிகுமார்-சிம்ரன் ஆகியோர் கணவன்-மனைவியாக நடித்து வெளியாகி வரவேற்பு பெற்றது ‘டூரிஸ்ட் பேமிலி’ படம். இப்படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் தற்போது ‘வித் லவ்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார்.
அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ள இப்படத்தை ஸயான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. பிப்ரவரி 6-ந்தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அப்போது அபிஷந் ஜீவிந்த் தெரிவிக்கையில்,
‘என் நன்றி அனைத்தும் ரஜினிகாந்த் சாருக்கே. நான் நடிக்கலாமா? என்ற சந்தேகம் எனக்குள் இருந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவர், ‘நீ நடி கண்ணா’ என்று சொன்னார். அந்த வார்த்தையிலேயே என் எல்லா தயக்கமும் உடைந்துவிட்டது.
அன்றே, ‘என்ன நடந்தாலும் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும்’ என்று முடிவு செய்தேன். இயக்குநர் மதனுக்கு நன்றி. ’ டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய மரியாதை கிடைத்தது. ஆனால் இந்த படம் வெளியான பிறகு, மதனுக்கு அதைவிட இரட்டிப்பு மரியாதை கிடைக்கும். இப்படத்தில் மற்ற அனைவருமே சூப்பராக நடித்துள்ளனர்’ என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…