‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு: சேரன் அதிருப்தி

‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு: சேரன் அதிருப்தி

தமிழக அரசு வழங்கும் விருதுகள் தொடர்பாக, சேரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்..

2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான திரையுலகிற்கான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்காக பலரும் நன்றி தெரிவித்து வரும் அதே சமயத்தில், விருது கிடைக்காத பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தற்போது 2019-ம் ஆண்டு தனது இயக்கத்தில் வெளியான ‘திருமணம்’ படத்துக்கு விருது கிடைக்காதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சேரன். இது தொடர்பாக சேரன் தனது எக்ஸ் தளத்தில்,

‘பெண்களுக்கு இலவச பஸ், வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவித்தொகை, திருமணத்திற்கு அரசு உதவி, இதையெல்லாம் செய்யும் அரசு. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.

வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த ‘திருமணம்’ திரைப்படம் தேர்வுக் குழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது.

அரசுக்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கு கேட்கும் உரிமை இருக்கிறது. இனி எவருக்கும் இதுபோல் நடக்க கூடாது. நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசுகள் மாறலாம். அரசின் நிலைப்பாடு என்றும் பாராபட்சமாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Cheran unhappy over Tamil Nadu government award rejection for film ‘Thirumanam’
dinesh kumar

Recent Posts

தந்தை விஜயைப் போலவே அமைதியாக… ஜேசன் சஞ்சயை புகழ்ந்த நடிகர் சூரி!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா நிறுவனம் மற்றும் ஜேசன் சஞ்சயின் JSK…

28 minutes ago

இளையராஜா இசையமைத்த மராத்தி படம் ‘கோந்தல்’ ஆஸ்கர் போட்டிக்கு தேர்வு!

கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற திரைப்படம் ‘கோந்தல்’. அறிமுக இயக்குநர் சந்தோஷ் திவாகர் இயக்கியுள்ள…

34 minutes ago

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

21 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

21 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

22 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

22 hours ago