Rajinikanth is a six-armed man.. MS Dhoni is a seven-armed man..! The post published by CSK has gone viral..!
ரஜினி ஆறு படையப்பன்னா.. எம்.எஸ் தோனி ஏழு படையப்பனாம்..! CSK வெளியிட்ட பதிவு வைரல்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ படம் ரீ ரிலீஸானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த இப்படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதில், ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது, வெளிநாடுகளிலும் ரீ-ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர்.
மேலும், திரையுலகில் ரஜினி நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் ‘படையப்பா’ படம் திரைக்கு வந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இதில், ஆறு படையப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், எம்.எஸ். டோனியை ஏழு படையப்பன் என பெயரிட்டு, புகைப்படம் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சி.எஸ்.கே.) எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ரஜினி துண்டை தோளில் போடுவது போன்று, டோனியும் துண்டை தோளில் போட்டு இறங்கி நடந்து வரும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
டோனியின் ராசியான எண் ஏழு. அதனை குறிக்கும் வகையில் ஏழு படையப்பன் என சி.எஸ்.கே. பெயரிட்டுள்ளது. தற்போது இந்தப் படம் இணையவெளியில் செம வைரலாய் தெறித்து வருகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…