Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து ஒரே வார்த்தையில் பதில் அளித்த ரஜினி.வைரலாகும் தகவல்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.

தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு சென்ற நடிகர் ரஜினியிடம் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, ‘வாழ்த்துகள்’ என்று ஒரு வரியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Rajinikanth about Vijay political party
Rajinikanth about Vijay political party