Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நீண்ட நாள் கனவு நினைவாகியது”.. ரஜினிகாந்த் குறித்து நெகிழ்ச்சி பதிவு வெளியிட்ட தமன்னா

rajini-presented-a-gift-to-actress-tamannaah

இந்திய திரை உலகில் ரசிகர்களால் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைப்பில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, சிவராஜ்குமார் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதனால் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகை தமன்னா பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், “ரஜினி சாரோட நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நினைவாகியது. ஜெயிலர் படப்பிடிப்பில் கழித்த எனது நினைவுகளை நான் எப்போதும் ரசிப்பேன் எனக் கூறியதோடு படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினி கையொப்பமிட்ட ஆன்மீக புத்தகம் ஒன்றை தனக்கு பரிசளித்தார். அது மிகவும் அர்த்தமுள்ள பரிசு” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இவரது இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

rajini-presented-a-gift-to-actress-tamannaah
rajini-presented-a-gift-to-actress-tamannaah