Rajini film director who told the super hero story to Vijay
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார்.
இவர் தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்கிற படத்தை இயக்கி உள்ளார். ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தான் கூறிய கதையை பற்றி சமீபத்திய பேட்டியில் இரஞ்சித் கூறியுள்ளார். அதில், காலா படத்திற்கு பின் விஜய்யை சந்தித்து கதை சொன்னேன்.
அது ஒரு சூப்பர் ஹீரோ கதை. அந்தக்கதை விஜய்க்கும் பிடித்திருந்தது. அது படமாக உருவாவதற்காக காத்திருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…
Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…