Rashi Khanna to pair with Vikram
சூர்யா-ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான ஆறு, வேல், சிங்கம் பட வரிசைகள் என அனைத்தும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தன.
இதனிடையே ஹரியும் சூர்யாவும் ‘அருவா’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.
ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடித்து படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து இயக்குனர் ஹரி விக்ரமுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் பரவின.
இந்நிலையில் அப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Yen Magaley Lyrical Video | Niram | D.Imman | Pa. Vijay | Balaram
Pizza Boys Lyrical Video | Pizza Boys | Shivam Shankar, Alfia | Shekhar Keshav Sirrinn…
வழக்கறிஞர் தொழிலில் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணத்தில் ஆர்வமில்லாமல் தனது கனவை…
தனது மகளின் நலனுக்காகத் துணையின்றி வாழ்ந்து வரும் விஜய் ஆண்டனி, ஊட்டியில் மகளுடன் வசித்து வருகிறார். இந்தச் சூழலில், மகளுக்குத்…
தமிழக காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி தனுஷ், சாய் பல்லவியின் தலைமையிலான சிறப்புப் படையில் பணியாற்றுகிறார். தமிழகத்தில்…
விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற கனவுடன் வாழும் கிராமத்துப் பெண் சத்விகா வீராவள்ளி. குடும்பத்தினரின் எதிர்ப்பால் தனது படிப்பைத் தொடர…