கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ரீதுவர்மா உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின் வேறு எந்த படமும் வெளியாகாமல் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளத்திலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த், இயக்குனர் தேசிய பெரியசாமிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினியின் வாழ்த்தை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது,
‘”சூப்பர்.. எக்ஸலண்ட்.. ஹா.. ஹா.. ஹா.. வாழ்த்துக்கள்.. பெரிய பியூச்சர் இருக்கு உங்களுக்கு”. காலையில் இருந்து இதுமட்டும் தான் கேட்டுகிட்டு இருக்கு காதுல. பறந்துட்டு இருக்கேன். அனைவருக்கும் நன்றி” என்று பதிவு செய்துள்ளார்.
இந்த டுவிட்டில் தேசிங்கு பெரியசாமி, ரஜினியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் டுவீட்டின் இடையிடையே பாபா முத்திரையை அவர் குறிப்பிட்டுள்ளதால் ரஜினியிடம் இருந்து கிடைத்த பாராட்டு தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…