‘ரஜினி 173’ -ஐ இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி; இசை அனிருத்!

‘ரஜினி 173’ -ஐ இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி; இசை அனிருத்!

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக, ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. கமல் தயாரிக்க அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி. இதனால், இப்படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

ரஜினியின் 173-வது படத்துக்காக ‘மகாராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலன் மற்றும் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் ஆகியோர் கதைகள் கூறினார்கள். இந்த இருவரில் ஒருவர் தான் இயக்குநராக இருப்பார் என்று பேசப்பட்டது.

இதன் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பை இன்று காலை 11 மணியளவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. இதனால், ரஜினி 173 மீது எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. சரியாக 11 மணிக்கு அறிவிப்பும் வெளியானது. ஆனால், யாரும் அதிகம் கணிக்காத சிபி சக்ரவர்த்தி இயக்குநராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ கவனம் ஈர்த்தது. இந்தப் படத்தின் வெற்றியால் சிபி சக்ரவர்த்தி பரவலாகப் பேசப்பட்டார். ரஜினி தற்போது ’ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் . அதனை முடித்துவிட்டு கமல் தயாரிக்கும் தனது 173-வது படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். அதன் இயக்குநரும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி 173 படத்தை தொடர்ந்து ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தினை நெல்சன் இயக்குவது உறுதியாகி இருக்கிறது.

‘Rajini 173’ is directed by Sibi Chakraborty; music by Anirudh!
dinesh kumar

Recent Posts

ரவியை காதலிக்கும் நீத்து, கடுப்பான சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…

30 minutes ago

ஆனந்தி சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

45 minutes ago

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…

18 hours ago

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்! என்ன காரணம்? பகிர்ந்த பிரபலம்..

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…

18 hours ago

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் “புருஷன்”- புரோமோ வீடியோ வெளியீடு

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…

18 hours ago

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது?

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…

19 hours ago