Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவால் ஷாக்கான அப்துல்.. வருத்தத்தில் சிவகாமி.. இன்றைய ராஜா ராணி2 எபிசோட்

rajarani2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு சரவணன் கடையில் இருக்க அப்போது கடைக்கு வரும் பரந்தாமன் மீண்டும் சரவணன் மிரட்டுகிறார். சரவணன் பதிலுக்கு உன்னை தேர்தலில் தோற்கடித்து ஓட விட்டேன் என சவால் விட உன் கைய வச்சே உன் கண்ண குத்துறேன் என செந்திலை களம் இறக்குவதை பற்றி பேசுகிறார்.

பிறகு இந்த பக்கம் சந்தியா உட்பட எல்லோருக்கும் குண்டு எறிதல் போட்டி நடைபெறுகிறது. அப்துல் வழக்கம் போல சந்தியா உன்னால முடிஞ்சா பண்ணி இல்லனா உனக்கு பதில் நான் பேசுகிறேன் என சொல்ல சந்தியா நான் பாத்துக்குறேன் என கூறுகிறார். பிறகு அப்துலுக்கு இணையாக குண்டு எறிய அதைப் பார்த்து அப்துல் அதிர்ச்சி அடைகிறார்.

இந்தப் பக்கம் அர்ச்சனா பக்கத்து வீட்டு பெண்ணிடம் தனது குழந்தையை வாங்கி கொஞ்சிக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருக்க இருவரும் எதிர்பாராத நேரத்தில் குழந்தை வண்டியோடு நகர்ந்து செல்ல எதிரே வரும் பைக் மோத வர உடனே இதைப் பார்த்து அர்ச்சனா பதறிப் போய் ஓடி குழந்தையை தூக்கி காப்பாற்றுகிறார். அர்ச்சனாவின் பதட்டத்தைப் பார்த்து ஜெசி மற்றும் அந்த பெண் என இருவரும் ஒரு மாதிரி பார்க்க அர்ச்சனா யாருடைய குழந்தையா இருந்தாலும் இப்படித்தானே பதருவாங்க என சமாளிக்கிறார்.

அந்தப் பெண் என்னமோ நீ பெத்த புள்ளையாட்டம் பதறுற என கேட்க அர்ச்சனாவுக்கு வேர்த்து போகிறது. அடுத்து சிவகாமி தன்னுடைய கணவருடன் கடைத்தெருவுக்கு சென்று வர அப்போது எல்லோரும் சரவணன் செந்தில் சண்டையை பற்றி பேச இருவரும் வருத்தப்படுகின்றனர். பின்னர் இந்த பக்கம் சந்தியா அப்துல் உட்பட எல்லோரும் கபடி போட்டியில் கலந்து கொள்கின்றனர். கபடி போட்டி விறுவிறுப்பாக நடக்கிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 rajarani2 serial episode update

rajarani2 serial episode update