rajarani2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சிவகாமி சந்தியாவை நீ இந்த வீட்டு மருமகள் இல்ல நீ தான் சரியான குடும்பத் தலைவி என பாராட்டுகிறார். பிறகு ஆதி எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க யாரும் முகம் கொடுத்து பேசாமல் அங்கிருந்து நகர்ந்து செல்கின்றனர்.
இதனால் ஆதி கதறி அழ மறுநாள் காலையில் எல்லோரிடமும் மீண்டும் பேச தொடங்க யாரும் முகம் கொடுத்து பேசவில்லை. அடுத்து சந்தியா சரவணனிடம் எல்லோரும் ஆதியை ஒதுக்குவது தப்பு அவனிடம் பேசுங்கள் என சொல்ல அவன் மீது இன்னும் கோபம் குறையவில்லை என கூறுகிறார்.
சிவகாமி மற்றும் ரவி இருவரும் ரூமில் நம்ம 2 பிள்ளைகளும் ஆதியை வெறுத்து விடுவாங்களோ இதனால் பிரிந்திடுவாங்களோ என பயமாக இருக்கிறது என புலம்புகிறார்.
அதன் பின்னர் சரவணன் மற்றும் செந்தில் உட்கார்ந்து கடை பற்றி பேசிக்கொண்டிருக்க அங்கு வரும் ஆதி இருவரிடம் மன்னிப்பு கேட்டு தன்னிடம் பேசுமாறு சொல்ல பிறகு ஒரு வழியாக சரவணன் மனம் மாறி ஆதிக்கு ஆறுதல் கூறுகிறார். பிறகு செந்தில் ஆதிக்கு ஆறுதல் சொல்ல சிவகாமி தன்னுடைய கணவருடன் இதை பார்த்து சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றை பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…
இட்லி கடை படத்தின் 5 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு…
பிக் பாஸ் முதல் ப்ரோமோ இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று…