Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெசி வீட்டுக்கு வர சிவகாமி போட்ட கண்டிஷன். அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு

rajarani2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் ஆதியை கண்டபடி பேசி அடிக்க சிவகாமி மற்றும் அவருடைய கணவர் நீ எங்க வயித்துல தான் பொறந்தியா அருவருப்பா இருக்கு வீட்டை விட்டு வெளியே போய் என்ன சொன்ன சந்தியா அவர்களை தடுத்து ஜெஸ்ஸி விசயத்தில் முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் இப்படி பண்ணாதீங்க என சொல்கிறார்.

ஆதி ஒவ்வொருத்தர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க யாரும் மன்னிப்பதாக இல்லை. ஜெசியை நான் உண்மையாகத்தான் காதலிச்சேன்‌. ஆனா அவ கர்ப்பமாய் இருப்பதாக சொல்ல என்ன செய்வது என்று தெரியாமல் அப்படி சொல்லிட்டேன் என்ன மன்னிச்சிடுங்க இது இவ்வளவு பெரிய விஷயமாக நான் நினைச்சு கூட பார்க்கல என கூறுகிறான்.

சரவணன் இந்த பிரச்சனைக்கு ஒரே முடிவு இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான். அவங்க வீட்டுக்கு போய் உங்க அப்பா அம்மா கால்ல கைல விழுந்து அப்படியே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் என சரவணன் சொல்ல சிவகாமி அந்த பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி கர்ப்பமானது அதை எப்படி நம்ம குடும்பத்துக்கு சரிவரும் என சொல்ல இவனை நம்பி இப்படி ஒரு தப்பு பண்ணி வச்சு இதை தவிர அந்த பொண்ணு வேற என்ன தப்பு பண்ணிச்சு என சரவணன் கேட்க சிவகாமி உங்க பொண்ணு எங்க குடும்பத்துக்கு எத்தனை கிடையாது என சொல்ற தகுதியை நாம இழந்துட்டோம் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் ஒரே வழி என கூறுகிறார்.

ஆனால் இதுக்கெல்லாம் ஒரு சில கண்டிஷன் இருக்கு என சொல்ல சந்தியா என்ன என்று கேட்க அந்த பொண்ணு மத அடையாளத்தை மொத்தமாக மறந்துட்டு இந்த வீட்டுக்கு வரணும். அவங்க அப்பா அம்மா யாரு என்ன யார்கிட்டயும் சொல்ல கூடாது. சொல்லப்போனால் ஒரு அனாதையா தான் இந்த வீட்டுக்கு வரணும் என சொல்ல அனைவரும் அதிர்ச்சடைகின்றனர். நீங்க சொல்றது எந்த விதத்துல நியாயமற்ற இத ஜெசி மட்டும் இல்ல எந்த பொண்ணு ஏத்துக்க மாட்டா என சந்தியா சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் சிவகாமி நீ சொல்றது எல்லாம் சரிதான் ஆனாலும் இது நடக்காது என கூறுகிறார்.

rajarani2 serial episode update
rajarani2 serial episode update