Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெஸ்ஸி மற்றும் அர்ச்சனா இடையே ஏற்பட்ட மோதல். செந்தில் செய்த வேலை. இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்

rajarani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெசி கடைக்கு போகும் அர்ச்சனா என் கடைக்கு வந்த கஷ்டம் அவரோட மனசு கெடுத்து என் பொழப்பை கெடுக்கிற இந்த கடையை நான் உனக்கு போட்ட பிச்சை என நடுரோட்டில் நின்று சண்டையிட ஜெசியும் ஏட்டிக்கு போட்டியாக சண்டையிடுகிறார்.

அப்போது அந்த வழியாக வரும் சிவகாமி இருவரும் நடு ரோட்டில் நின்று சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து கண்கலங்கி வீட்டுக்கு வந்து விடுகிறார். அடுத்து சந்தியா சரவணனுக்கு ஃபோன் போட்டு பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு, அதனால தான் லேட் ஆகிடுச்சு என சொல்கிறார். பின்னர் படகு போட்டியில் கலந்து கொள்வது பற்றியும் அதற்காக பார்மில் கையெழுத்து போட வேண்டும் என சொல்லியும் அந்த பார்மை அனுப்புவதாக கூற சரவணன் முதலில் வேண்டாம் என மறுக்க பிறகு சந்தியாவின் பேச்சை கேட்டு சரி என ஒப்புக்கொள்கிறார்.

அடுத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் செந்தில் வீட்டு வாசலில் விழுந்து கிடக்க அவனது அப்பா அவனை கூட்டி வந்து ரூமில் படுக்க வைக்கிறார். ரூம் கதவை சாத்தி வெளியே வர அப்போது சிவகாமி சரியாக வந்து நின்று என்ன என கேட்க எது எதையோ சொல்லி சமாளித்து சிவகாமியை உள்ளே அழைத்துச் சென்று விடுகிறார்.

வீட்டுக்கு வரும் அர்ச்சனா செந்தில் குடித்து விட்டு வந்து படுத்திருப்பதை பார்த்து அவனைத் திட்டுகிறார் பிறகு செந்தில் பரந்தாமன் கொடுத்த பணத்தை எடுத்துக் கொடுக்க அர்ச்சனா வாயை பிளக்கிறார். ஜெஸ்ஸி தன்னிடம் சண்டை போட்டதாக சொல்ல செந்தில் நீ போட்டயா ஜெசி போட்டாலா என கேட்க அர்ச்சனா குடிபோதையில் கூட என் மேல சந்தேகப்படுவதை விடாதீங்க என திட்டுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஆதி மற்றும் செந்தில் இடையே சண்டை வர சரவணன் செந்திலை தடுக்க அப்போது சரக்கு வாடை அறிந்து குடிச்சிருக்கியா என கேட்கிறார்.

rajarani 2 serial episode update
rajarani 2 serial episode update