Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெஸ்ஸியை நக்கலாக பேசிய அர்ச்சனா. அதிர்ச்சியில் சிவகாமி குடும்பத்தினர். இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

rajarani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹோட்டல் நடந்த பிரச்சனையால் கௌரி மேடம் எல்லாரையும் கூப்பிட்டு தப்பு பண்ணுங்க நீங்களா முன்னாடி வந்துட்டா பனிஷ்மென்ட் குறையும் என சொல்ல சந்தியா முன்னே வர பிறகு ஜோதி மற்றும் சேட்டா என இருவரும் வருகின்றனர். பிறகு சந்தியா நடந்த விஷயத்தை சொல்ல முயற்சி செய்ய கௌரி மேடம் எதையும் காதில் வாங்காமல் எதுவாக இருந்தாலும் என்குயரி ஆபிஸர் கிட்ட பேசிக்க என சொல்லி விடுகிறார்.

இந்த பக்கம் அர்ச்சனா மற்றும் ஜெசி இடையே துணி காய போட்டதால் பிரச்சனை உருவாக ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் கண்டபடி பேசி சண்டையிட பிறகு பஞ்சாயத்து பண்ணி விட்டு போக அப்போதும் அர்ச்சனா ஜெசியை நக்கலாக பேசி நோகடிக்கிறார்.

பிறகு சரவணன் ரூமுக்கு வந்து சந்தியாவுக்கு போன் செய்ய சந்தியா எவ்வளவு முறை உங்களுக்கு போன் பண்றது ஏன் போன் எடுக்கல? என திட்டி விட்டு நடந்த விஷயங்கள் சொல்ல சரவணன் அதிர்ச்சி அடைகிறார். அது மட்டுமல்லாமல் நீங்க அது மேடம் கிட்ட பேசுங்க கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க நீங்க எந்த தப்பும் பண்ணல என சரவணன் சொல்ல அவங்க பேசுறது காதுல வாங்கல கண்டிப்பா பனிஷ்மென்ட் இருக்கும்னு நினைக்கிறேன். டிவில எல்லாம் வந்துடுச்சு எல்லோரும் அத்தை கிட்ட கேட்டு அவங்கள வருத்தப்பட வைப்பாங்க அத்தை இதை எப்படி எடுத்துக்க போறாங்கன்னு தெரியல என சொல்ல சரவணன் நான் அம்மாகிட்ட பேசுறேன் என சொல்லி போனை வைக்கிறார்.

பிறகு சரவணன் சிவகாமியிடம் நடந்த விஷயத்தை சொல்ல முயற்சி செய்ய அதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்து சந்தியா போலீஸ் ட்ரைனிங் க்கு போய் இருக்கான்னு சொன்ன ஆனா அவ ஹோட்டல்ல குடிச்சிட்டு கூத்தடிச்சிட்டு இருக்கா என சொல்ல சிவகாமி குடும்பம் மொத்தமும் அதிர்ச்சி அடைகிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

rajarani 2 serial episode update
rajarani 2 serial episode update