Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஓட்ட பந்தயத்தில் கடைசியில் வரும் சந்தியா.. அர்ச்சனா எடுத்த முடிவு.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

rajarani 2 serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ரவி நீ சரவணன் இடம் அப்படி சொல்லி இருக்கக் கூடாது என சிவகாமியிடம் சொல்ல எனக்கு வேறு வழி தெரியல சந்தியா கண்டிப்பா அந்த கோப்பையை ஜெயித்து நம்ப ஊரில் போஸ்டிங் வாங்க வேண்டும் என சிவகாமி சொல்கிறார். அதுக்கு ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு தான் ஆகணும் என கூறுகிறார்.

அடுத்து இந்த பக்கம் கௌரி மேடம் எல்லோருக்கும் ஒரு ஓட்டப்பந்தய போட்டி வைக்கிறார். விலங்குகள் நடமாட்டம் உள்ள காட்டுப்பகுதிக்குள் ஓடிச் சென்று திரும்பி வரவேண்டும் என்பதுதான் அந்த போட்டி. இந்த போட்டியில் சந்தியா அப்துலுக்கு அடுத்த ஆளாக ஓடிவரும் நிலையில் வழியில் ஒருவர் கீழ விழுந்து காலில் அடிபட்டு எழுந்துக்க முடியாத நிலையில் இருக்கிறார். அப்துல் உட்பட எல்லோரும் அந்த பெண்ணை கண்டுகொள்ளாமல் ஓடி வர சந்தியா விலங்குகள் நடமாடும் பகுதி என்பதால் அப்படியே விட்டு விட முடியாது என்பதற்காக அந்த பெண்மணியை தூக்கி கொண்டு ஓடி வருகிறார்.

எல்லோரும் வந்த பிறகு இருவர் மட்டும் வரவில்லை என சொல்ல அனைவரும் பதறுகின்றனர் பிறகு ஜோதி நடந்த விஷயத்தை சொல்கிறார். சந்தியாவையும் அந்த பெண்ணையும் தேட வண்டியை அழைக்க அதற்குள் சந்தியா அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார். ஆனாலும் கௌரி மேடம் இது சர்வீஸ் பண்ண வந்த இடமில்லை பயிற்சிக்கு வந்த இடம் நீ கடைசியாக வந்ததாகத்தான் கருதப்படும் என சந்தியாவை திட்டி விட்டு சென்று விடுகிறார். பிறகு வழக்கம் போல் அப்துல் சந்தியாவை நக்கல் அடிக்க அடிப்பட்ட பெண்மணி சந்தியாவுக்கு நன்றி கூறுகிறார்.

இந்த பக்கம் செந்தில் கடைக்கு வரும் பரந்தாமன் தன்னுடைய மனைவிக்கு துணி எடுக்க வேண்டும் என சொல்லி கட்டு கட்டாக பணத்தை கொடுக்க அதை பார்த்து அர்ச்சனா வாய் பிளக்குகிறாள். இதுதான் சந்தர்ப்பம் என பரந்தாமன் தேர்தலில் செந்திலை போட்டி போட சொல்லு முதலில் செந்தில் தயக்கம் காட்ட பிறகு அர்ச்சனா பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு தேர்தலில் நிற்க செந்திலை சம்மதிக்க வைக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

rajarani 2 serial episode update
rajarani 2 serial episode update