Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகாமியிடம் சத்தியம் செய்த சந்தியா.. வருத்தத்தில் சரவணன்..இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

rajarani 2 serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சிவகாமி சந்தியாவிடம் இந்த கோப்பையை நீ கட்டாயம் ஜெயிக்க வேண்டும் நீ முழுமையான ஐபிஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்றால் இதை ஜெயிச்சு தான் ஆக வேண்டும் என உறுதியாக சொல்கிறார். எனக்காக இல்லனாலும் உனக்காக உன்னுடைய ஐபிஎஸ் கனவுக்காக இந்த கோப்பையை ஜெயிப்பேனு எனக்கு சத்தியம் பண்ணி கொடு என சிவகாமி கேட்க சரவணன் அவருடைய அப்பாவும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

ஆனால் கொஞ்சம் யோசித்த சந்தியா பிறகு கண்டிப்பாக இந்த கோப்பையை நான் ஜெயிக்கிறேன் என சிவகாமிக்கு சத்தியம் செய்து கொடுக்க அவர் சந்தியாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். பிறகு இவர்கள் எல்லோரும் சாப்பிட போக அங்கு கேண்டினில் இது ட்ரைனிங் வந்து இருப்பவர்கள் மட்டும் சாப்பிடும் கேண்டீன் மற்றவர்களுக்கு வேற இடத்தில் கேண்டீன் என சொல்ல பிறகு சரவணன் சிவகாமி மற்றும் ரவி மூவரும் அந்த இடத்திற்கு சாப்பிட செல்கின்றனர்.

இந்த பக்கம் சந்தியா சாப்பிட போகும்போது கௌதம் மற்றவர்களிடம் கண்டிப்பாக அந்த கோப்பையை நான் ஜெயிப்பேன் ஜெயித்து காட்டுவேன் என சொல்ல சந்தியா அதை கவனிக்கிறார். அதன் பிறகு இந்த பக்கம் சரவணன் சந்தியாவை பிரிய போவதை நினைத்து வருத்தமாக இருக்கிறார். சிவகாமி சரவணனுக்கு ஆறுதல் கூறி தேற்றுகிறார்.

பிறகு எல்லோரும் ரூமுக்கு வந்தது ரவி சிவகாமி அழைத்துக் கொண்டு வெளியே செல்ல சரவணன் சந்தியாகவும் தனிமையில் பேசிக் கொள்கின்றனர். சந்தியா மூன்று மாதம் உங்கள விட்டு எப்படி இருக்க போறன்னு தெரியல என வருத்தப்பட சரவணன் ஆறுதல் கூறுகிறார். பிறகு இருவரும் மாறி மாறி ஸ்வீட் ஊட்டிக் கொள்கின்றனர்.

அதன் பிறகு சிவகாமி ஊருக்கு கிளம்புவதை பற்றி பேச சரவணன் எல்லாம் தயாராக இருக்கிறது என கூற அந்த நேரத்தில் இன்னொரு பயிற்சி பெறும் பெண் வந்து சந்தியாவிடம் கிளாஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சு என சொல்ல சந்தியா கிளாசுக்கு கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

rajarani 2 serial episode update
rajarani 2 serial episode update