Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அர்ச்சனாவால் ஆதிக்கு வந்த சிக்கல்.. சந்தியாவிற்கு முத்தம் கொடுக்க முடியாமல் புலம்பும் சரவணன்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

rajarani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு எக்ஸாம் முடிந்து வீட்டுக்கு வந்த சந்தியா சரவணன் சிவகாமியை பார்க்க பூஜை ரூமுக்கு செல்ல பிறகு சிவகாமி வந்துட்டீங்களா எக்ஸாம் எப்படி எழுதின என கேட்டு விபூதி வைத்து ஆசீர்வாதம் செய்கிறார். அதன் பிறகு இந்த பேப்பரை திருப்பி வந்ததும் நீ போலீஸ் ஆகிடுமே என்னை கேட்க இல்லை இது முதல் பரிச்சை தான் இன்னும் ஒரு பரிட்சை இருக்கு அதுக்கு அப்புறம் இன்டர்வியூ இருக்கு என கூறுகிறார்.

பிறகு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது அர்ச்சனா ஆதியின் திருமணம் பற்றி பேச்சை எடுக்க ஆதி அதிர்ச்சியாகிறான். சரவணன் நீயும் பார்வதி போல யாரையாவது காதலிக்கிறியா என கேட்க ஆதி அப்படி எல்லாம் இல்லை என சொல்கிறான். பிறகு சிவகாமி சீமந்தம் முடிந்ததும் ஆதிக்கு பொண்ணு பாக்க தொடங்கணும் என கூறுகிறார். அதன் பிறகு அர்ச்சனா வெளியே அமர்ந்து கொண்டிருக்க ஆதி போன் பேசி விட்டு உள்ளே வரும்போது கல்யாணம் பற்றி பேச அந்த நேரத்தில் சந்தியா வருவதால் இருவரும் மழுப்பிக் கொண்டு உள்ளே சென்று விடுகின்றனர்.

பிறகு சந்தியா ரூமுக்குள் இருக்க சரவணன் சந்தியாவிடம் பேசிக்கொண்டே நெருங்கி சென்று முத்தமிட முயற்சி செய்ய கரண்ட் கட் ஆகி விடுகிறது. கரண்ட் போனாலும் பரவாயில்லை என மீண்டும் நெருங்க மயிலு விளக்கோடு உள்ளே ஓடி வருகிறார். கரண்ட் கம்பம் சாஞ்சு போச்சு காலையில தான் கரண்ட் வருமாம். அம்மா உங்களை காத்தோட்டமா தூங்க வெளியே வர சொன்னாங்க என சொல்கிறார். பிறகு மயிலு வெளியே போனது சரவணன் மீண்டும் முத்தம் கொடுக்க முயற்சி செய்ய திரும்பவும் மயிலு நீங்க இன்னும் வரலையா என உள்ளே ஓடி வருகிறார். பொண்டாட்டிக்கு நிம்மதியா ஒரு முத்தம் கொடு கொடுக்க முடியல என புலம்புகிறார் சரவணன். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

rajarani 2 serial episode update
rajarani 2 serial episode update