Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சரவணனுக்கு சவால்விடும் செந்தில், சரவணன் போட்ட பிளான் இன்றைய ராஜா ராணி சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெசி ஆதியிடம் இந்த பணத்தை எங்க அப்பா கிட்ட இருந்து தானே வாங்குன உனக்கு அசிங்கமா இல்லையா என கேவலமாக பேச ஆதி பளார் என அறைந்து பக்கத்தில் இருந்து பொருட்களை தூக்கி வீச அந்த சத்தம் கேட்டு மற்ற குடும்பமும் வந்து கதவை தட்ட ஜெசி மாஸ்க் போட்டுக்கொண்டு கதவை திறந்து சூட்கேஸ் கீழே விழுந்து விட்டதாக சொல்லி சமாளிக்கிறார்.

பிறகு எல்லோரும் வெளியே போனதும் நீ பண்ண வேலையை இந்த குடும்பத்தை கிட்ட சொல்றதுக்கு எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது இன்னொரு முறை என் மேல கைய வெச்ச அவ்வளவுதான் என எச்சரிக்கிறார். அதன் பிறகு செந்தில் கடை கடையாகச் சென்று ஓட்டு கேட்டு டோக்கனை கொடுத்துவிட்டு வருகிறார். இதனால் சரவணன் தரப்பினர் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் இருக்கின்றனர். சரவணன் ஜனநாயக முறைப்படி ஓட்டு கேட்டு நாம கண்டிப்பா ஜெயிப்போம் என அவர்களுக்கு உறுதி கொடுக்கிறார்.

அடுத்து பரந்தாமன் சரக்கு பாட்டில்களை இறக்கி எல்லோருக்கும் சரக்கு ஊற்றி கொடுத்து தனக்கு ஓட்டு போடுமாறு கேட்கிறார். இது குறித்த வீடியோவை சரவணன் தரப்பினர் சரவணனுக்கு காட்ட என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்க அப்போது கேபிள் டிவி காரர் வந்து பணத்தைக் கேட்க அப்போது சரவணனுக்கு லைவ் வீடியோவில் எல்லோரிடமும் இந்த வீடியோவை காட்டி ஓட்டு கேட்கலாம் என ஐடியா தோன்றுகிறது.

உடனடியாக கேபிள் டிவி காரரை வைத்து லைவ் செல்கிறார் அதில் அல்வா எப்படி செய்வது என சொல்லிக் கொடுக்கப் போவதாக சொல்லி பரந்தாமன் சரக்கு ஊற்றி கொடுக்கும் வீடியோவையும் இடையே காட்டி அனைவரையும் அதிர வைக்கிறார். ஒரு நல்ல நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு நீங்க தான் மாற்றத்தை உருவாக்கணும் என சொல்லி அந்த வீடியோவை முடிக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் தேர்தல் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. சிவகாமி வர சரவணன் அவரை உள்ளே அழைத்துச் செல்ல செந்தில் அம்மாவை கூட்டிட்டு போய் நீ ஓட்டு வாங்கலாம்னு பார்க்கறியா? அம்மா எனக்கு தான் ஓட்டு போடுவாங்க என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

rajarani 2 serial episdoe update 05-01-23
rajarani 2 serial episdoe update 05-01-23