Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சரவணன் கொடுத்த கிப்ட்ஆல் கண்கலங்கிய சந்தியா.. சந்தியாவின் கனவை நிறைவேற்ற துடிக்கும் அண்ணன்.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

Raja Rani2 Serial Episode Update 25.02.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. கோவிலில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவிற்கு சரவணன் சந்தியா குடும்பத்தோடு சென்று இந்த நிலையில் அவருடைய அண்ணன் குழந்தைக்கு அருவி என பெயர் சூட்டினார். அமெரிக்கா போய் வந்தாலும் நம்முடைய ஊர் பெருமையை மறக்கல என அனைவரும் அவரை பாராட்டினார்கள். பிறகு அங்கிருந்த ஒரு பெண்மணி பிறந்ததுதான் பறந்தது ஒரு ஆம்பள பையனா பொறந்து இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் என கூறினார்.

அதன்பிறகு சந்தியா அது என்ன ஆம்பள பையன், பொம்பள பொண்ணு. அந்தக் காலம் எல்லாம் மாறிப் போச்சு இப்போ ஆம்பளைக்கு நிகரா பொம்பளைங்க இருக்காங்க என பேசினார். இனிமே அப்படி பேசாதீங்க என கூறினார். இதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் சந்தியா சொல்வதுதான் சரி என்று கூறினர். எல்லா இடத்திலேயும் கோல் போடுறா என அர்ச்சனா மனதுக்குள் நொந்து கொள்கிறார்.

அதன்பின்னர் சந்தியாவை தனியாக அழைத்துச் சென்ற சரவணன் அந்த பேனாவை சந்தியாவிற்கு கொடுக்கிறார். பிரித்துப் பார்த்த அவர் இந்தப் பேனா எப்படி உங்களிடம் வந்தது என கேட்க சரவணன் அவருடைய அப்பா அம்மாவை அழைத்து சென்று மருத்துவமனையில் மருத்துவம் பார்த்தது சந்தியாவுக்கு போன் பண்ணி பேசியது என எல்லா உண்மைகளையும் கூறுகிறார். எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகும் என்று கடவுள் முடிவு பண்ணி இருக்காரு. கடைசியா உங்க அப்பா அம்மாவ உயிரோடு பார்த்தது நான்தான் என சரவணன் சொல்வதைக் கேட்டு எங்க அப்பா அம்மா ஏதாவது பேசினார்களா என கேட்டு கண் கலங்குகிறார் சந்தியா. எதுவும் பேசல ஆனால் சாகுறதுக்கு முன்னாடி இந்த கனவை மட்டும் என்னிடம் கொடுத்தார் என கூறுகிறார்.

அந்த போட்டோவைப் பார்த்ததும் தான் அவர்கள் தான் உங்களுடைய அப்பா அம்மா என தெரியவந்தது. அதன் பிறகு இந்த விஷயத்தை எப்படி உங்களிடம் சொல்வது என நினைத்துக் கொண்டே இருந்தேன். அப்போதுதான் இந்தப் பேனா ஞாபகம் வந்தது அதை உங்களிடம் சேர்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன் சேர்த்து விட்டேன் என கூறுகிறார். இது பேனா இல்ல என் அப்பா அம்மா உடைய நினைந்து. நீங்கள் செய்த இந்த உதவியை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என கூறுகிறார். அதன்பிறகு சந்தியாவை சமாதனம் செய்து கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார்.

உள்ளே போன சந்தியா என்னுடைய போலீஸ் கனவில் என் அண்ணன் மகள் தான் நிறைவேற்ற வேண்டும் என நினைத்து தான் எழுதிய லெட்டரை பாப்பாவின் பக்கத்தில் வைக்கிறார். பிறகு செந்தில் வந்து குழந்தையை தூக்கும் போது அந்த லெட்டர் கீழே விழுந்துவிடுகிறது. அந்த லெட்டரை பார்த்து தருணம் அதை எடுக்க கீழே குனியும் போது தலையில் இடித்து கொள்ள சந்தியா அவரை உள்ளே அழைத்துச் சென்றுவிடுகிறார்.

பிறகு இந்த கடிதம் சந்தியாவின் அண்ணன் இடம் கிடைக்கிறது. பிரித்துப் படித்துப் பார்த்த அவர் உன்னுடைய கனவையே தியாகம் பண்ண முடிவு பண்ணிட்டியா இது என்னால ஏத்துக்க முடியாது என நினைத்து தாம்பூலப் பையில் வைத்து அதை சரவணனிடம் கொடுத்துவிட வேண்டும் என முயற்சி செய்கிறார்.

அதற்காக வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு தாம்பூல பை கொடுத்து இந்த பையை பத்திரமாக பார்த்துக் கொண்ட அதில் இருப்பதையும் பத்திரமாக பார்த்துக்கோங்க என சரவணனிடம் கூறுகிறார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த சரவணன் சந்தியாவின் அப்பா அம்மா புகைபடத்தை சுவற்றில் மாட்டி அவர்களை வணங்குகிறார். எல்லாத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கு என்பதை நான் இப்போதுதான் புரிந்து கொள்கிறேன் என கூறுகிறார். பிறகு இதை பார்த்த சந்தியா மகிழ்ச்சி அடைகிறாள். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் சரவணன் அந்த பையிலிருந்து அந்த லெட்டரை எடுக்கிறார்.

Raja Rani2 Serial Episode Update 25.02.22
Raja Rani2 Serial Episode Update 25.02.22