Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சரவணனுக்கு நடக்கப்போகும் பாராட்டு விழாவை தடுக்க அர்ச்சனா போடும் திட்டம்.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

Raja Rani2 Serial Episode Update 18.02.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வீட்டில் அனைவரும் காலையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கும் போது அப்போது வந்த சந்தியா அர்ச்சனாவை முறைத்து பார்த்தார். எவ்வளவு அசிங்கப்பட்டும் இன்னும் திருந்தல என மனதுக்குள் ஏற்றுக்கொள்கிறார். சந்தியா உழைத்து பார்ப்பதை பார்த்த பார்வதி என்ன அர்ச்சனா அண்ணிய அப்படி பாக்கறீங்க என கேட்க அர்ச்சனா குருமால எப்படி உப்பை அள்ளிப் போடுவது என்று சொல்ல செந்தில் அர்ச்சனாவை திட்டி அனுப்பி விடுகிறார்.

இதனையடுத்து ஊர் பெரியவர்கள் வீட்டிற்கு வந்து அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதாகக் கூறுகின்றனர். இதைக் கேட்டதும் வீட்டிலுள்ள அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அதற்காக பத்திரிகையும் அடித்து விட்டதாக கொடுக்க அதைப் பார்த்து இன்னும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அர்ச்சனா ஏற்கனவே நான் செம காண்டுல இருக்கேன் வீட்ல இருக்கவங்க பாராட்டுனது போதாதுனு ஊர் ஜனங்க வேற இவரை பாராட்ட வேண்டுமா? அப்படி என்ன சாதித்து விட்டார்கள் என புலம்புகிறார். இந்த விழாவைக் நடக்க விடக்கூடாது இல்லனா சரவணன் சந்தியாவை போக விடாமல் தடுத்து நிறுத்தவும். எது பண்ணாலும் பண்ணுலனாலும் சந்தியாவை கட்டாயமாக தடுத்து நிறுத்த வேண்டும் என திட்டம் போடுகிறார்.

பிறகு சந்தியாவுக்கு அவருடைய அண்ணன் போன் செய்து பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் தென்காசி வந்து செட்டில் ஆகப் போவதாகவும் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் அப்பா அம்மாவா இந்த வீட்டையே திரும்பவும் வாங்கி விட்டதாக சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட சந்தியா ரொம்ப மகிழ்ச்சி அடைகிறார். நான் இப்பவே நம்ப வீட்டுக்கு போய் சுத்தம் பண்ணி வைக்கிறேன் என சொல்கிறார்.

பிறகு இந்த விஷயத்தை தன்னுடைய மாமனார் மாமியாருடன் சொல்லி சந்தோஷப்படுகிறார். நான் எங்க வீட்டுக்கு போய்ட்டு சுத்தம் பண்ணி விட்டீர்கள் என சொல்ல சிவகாமியும் போயிட்டு வா என கூறி விடுகிறார். அதன் பிறகு நேராக சரவணனின் கடைக்குச் சென்று அவரிடம் இந்த விஷயங்களை சொல்ல இருவரும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு அங்கு வந்த ஒருவர் நீ எப்ப குழந்தை பெத்துக்க போறீங்க எனக் கேட்க சந்தியா வெட்கப்பட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடுகிறார்.

வீட்டிற்கு வந்த அவர் 15 நாட்கள் தங்குவதற்காக துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க அப்போது வந்த சரவணனிடம் அண்ணன் அண்ணியுடன் பத்து பதினைந்து நாள் நல்ல ஜாலியா இருந்துட்டு வரேனு என சொன்ன சரவணன் முகம் மாறுகிறது. எதுக்கு அவ்வளவு நாள், நாளைக்கே வந்துடுங்க என சொல்ல நான் இங்க வந்து மட்டும் என்ன பண்ண போறேன் என சந்தியா கூறுகிறார்.

அதன்பிறகு சரவணன் இது எடுக்க அது எடுக்கணும்னு நான் அடிக்கடி வீட்டிற்கு வர அது உங்களைப் பார்க்கத்தான். நீங்க காய்கறி வாங்கும் போது மொட்டை மாடியில் துணி காயும் போது என்ன கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 30 முறை உங்களை பார்த்து விடுவேன். உங்களைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது என சரவணன் செல்கிறார். பிறகு இருவருக்கும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது. மாறி மாறி முத்தமிட்டுக் கொள்ள இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani2 Serial Episode Update 18.02.22
Raja Rani2 Serial Episode Update 18.02.22