பார்வதி திருமணத்தை நிறுத்த அர்ச்சனா போடும் திட்டம்.. அர்ச்சனாவிடம் சவால் விட்ட சந்தியா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. நடப்பதெல்லாம் தப்பா இருக்கே என உட்கார்ந்து சந்தியா யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்த சரவணன் இதை எல்லாம் யாரோ வேண்டுமென்று தான் செய்யுறாங்க. யாருமே கண்டு பிடிச்சாலும் அதேபோல இந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை எடுத்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் போலீசில் புகார் அளிப்பது தான் சரி என சரவணன் சொல்ல நீங்க கடையை மட்டும் கவனிங்க நான் இந்த பிரச்சனைகளை பார்த்துக்கிறேன் என கூறுகிறார்.

பிறகு அர்ச்சனா கிணத்தடியில் சாத்துக்குடி சாப்பிட்டுக் கொண்டிருக்க அங்கு சென்ற சந்தியா நடந்த பிரச்சனைக்கு எல்லாம் நீதான காரணம் எனக் கேட்க அர்ச்சனா ஆமாம் நான் தான் குருமாவில் உப்பை எடுத்து கொட்டினேன் அத்தையோட புடவைய கத்தரி வைத்து கிழித்தேன் என கூறுகிறார். நான் செஞ்ச சின்ன சின்ன தப்பு எல்லாம் கண்டுபிடிச்சு என்ன இந்த வீட்டை விட்டு அனுப்ப பார்த்தேன் உன்னை சும்மா விடமாட்டேன். என் புருசன் என்கிட்ட சரியா பேசுறதில்லை இதுக்கெல்லாம் காரணம் நீதான். நீ எப்போ இந்த வீட்டுல கால் எடுத்து வைக்கிறோம் அன்னைக்கே எனக்கு இருந்த மரியாதை எல்லாம் போச்சு. உன்ன சுத்தமா எனக்கு புடிக்கல. இந்த வீட்ல ஒன்னு நீ இருக்கணும் இல்ல நான் இருக்கணும். உன்ன விட்டு வெளியே அனுப்பாமல் விடமாட்டேன் என சொல்கிறார்.

இவ்வளவு பிரச்சனை நடந்து நீ திருந்தாமல் இருக்க நீ எல்லாம் என்ன ஜென்மம் என சந்தியா சொல்ல நீ மட்டும் பார்வதியை குடோன்ல வெச்சு பூட்டின விஷயத்தை சொன்னா என்ன நடக்கும்னு யோசிச்சு பாரு, போய் சொல்லாதடா சொல்லிக்கோ எவ்வளவோ பார்த்தாச்சு இதை பார்க்க மாட்டானா, இது வெறும் டிரைலர் தான் இனிமே தான் ஆட்டமே இருக்கே என அர்ச்சனா சொல்ல சந்தியா உன்னால முடிஞ்சத பாத்துக்கோ, என்ன உன்னால நெருங்கக்கூட முடியாது என சவால் விட்டுவிட்டு வருகிறார்.

இந்தப் பக்கம் சரவணன் கடையில் இருக்க அப்போது வாழ்ந்த ஊர் பெரியவர்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்திருப்பதாக கூறி அவரை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவேற்கின்றனர். முதலில் தயங்கிய சரவணன் பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என சொல்ல அவர்களிடம் நாங்களே பேசிக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வருகின்றனர்.

பிறகு அர்ச்சனா ரூமில் அமர்ந்து கொண்டு இருக்க அப்போது அவருடைய அம்மா போன் செய்கிறார். ஒரு நல்ல வரன் வந்து இருக்கு அவளுக்கு உன் தங்கச்சி ப்ரியாவை கட்டி குடுக்கலாம்னு இருக்கேன் என சொல்ல நீ ஏம்மா இப்படி பண்ணிட்டு இருக்க பாஸ்கருக்கு மக்களுக்கும் தான் கல்யாணம் நடக்கும் முதல்ல இந்த சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறேன். அதன்பிறகு பார்வதியுடன் கல்யாணத்தை நிறுத்தி பாஸ்கருக்கும் பிரியாவுக்கும் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன் என கூறுகிறார். இப்படியெல்லாம் பண்ணா அந்த வீட்டில கொலை தான் நடக்கும் ஒழுங்கா நீ அடங்கி ஒடுங்கி குடும்பம் நடத்துற வேலையை பாரு என அவருடைய அம்மா சொல்லி அர்ச்சனா அதை கேட்கவில்லை.

பிறகு பார்வதியின் முன்னாள் காதலன் விக்கிக்கு போன் செய்து பார்வதி பாஸ்கர் ஒரு கல்யாணத்தை நிறுத்தி இல்லனா பார்வதியை கூட்டிட்டு போய்ட்டு கல்யாணம் பண்ணு. நீ எதுக்கு எதுவுமே பண்ணாம இருக்க என பேசுகிறார். இப்படி திரும்பவும் பழையபடி பல திட்டங்களை போடுகிறார் அர்ச்சனா. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani2 Serial Episode Update 17.02.22
jothika lakshu

Recent Posts

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

10 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…

13 hours ago

தனி ஒருவன் 2 : அப்டேட் கொடுத்த இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…

13 hours ago

மதராசி : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

13 hours ago

விதவிதமாக டிராமா போடும் ரோகினி, மனோஜ்க்கு வந்த பிரச்சனை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…

17 hours ago

நந்தினிக்காக அசிங்கப்படும் சூர்யா, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

17 hours ago