Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவிற்கு காத்திருக்கும் சரவணன்.. திட்டம் போட்டு பழிவாங்கும் அர்ச்சனா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

Raja Rani2 Serial Episode Update 02.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. அர்ச்சனா மயக்கம் வருகிறது வாந்தி வருகிறது என சொல்லி சந்தியாவை மட்டும் நிகழ்ச்சிக்கு போகாமல் தடுத்து நிறுத்தி அவரை தொடர்ந்து வேலை வாங்குகிறார். ஆவி பிடிக்க சுடுதண்ணீர் வேண்டும், இஞ்சி டீ வேண்டும், ஆப்பாயில் வேண்டும் என அவரை பாடாக படுத்துகிறார்.

சந்தியாவும் அர்ச்சனா உண்மையாகவே முடியாமல் இப்படியெல்லாம் கேட்கிறார் என நினைத்துக் கொண்டு அவர் கேட்பது எல்லாம் செய்து கொள்கிறார். இந்த பக்கம் சரவணன் இன்னும் சந்தியாவை காணவில்லையே என தேடிக்கொண்டிருக்கிறார் ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் தொடங்கி சரவணனை மேடைக்கு அழைக்கின்றனர்.

சரவணன் ஐந்தாவது படிக்கும் வரை அவருடைய பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவரை சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளனர். அவரை சரவணனை பாராட்டி பெருமையாக பேசுகிறார். குடும்ப கஷ்டம் காரணமாக என் கண் முன்னாடியே சிவகாமி இனி பார்ப்போம் என்ற ஸ்வீட் கடையில் தொடங்கி அதன் வளர்ச்சியை முழுமையாக கண்டவன் நான் என சரவணனை அவருடைய ஆசிரியர் மனதார பாராட்டுகிறார்.

இந்த பக்கம் ஆப்பாயில் சாப்பிட்டுவிட்டு நெஞ்சு எரிச்சலா இருக்கு கொஞ்சம் இஞ்சி டீ வேண்டும் என சொல்ல சந்தியா டீ போட போன போது பாலில் எலுமிச்சை விதைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். அர்ச்சனா மீண்டும் என்று நான் இந்த நிகழ்ச்சிக்கு போக கூடாது என முடிவு செய்து தான் இப்படி ட்ராமா போடுகிறார் என கோபப்படுகிறார். ஆனால் அடுத்த நாள் செய்த வேலையை கண்டுபிடித்தது போல காட்டிக்காமல் இருக்கிறார்.

இந்த பக்கம் சரவணனுக்கு மாலை மரியாதை செய்கின்றனர் விழா குழுவினர். பிறகு சரவணனை பேசுமாறு மேடைக்கு அழைக்கின்றனர். முதலில் சந்தியா எழுதி கொடுத்த பேப்பர் இல்லாமல் பேசத் தொடங்குகிறார் சரவணன். நான் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு நான் படித்த பள்ளி முதல் என்னைச் சுற்றியிருந்த பெரியவர்கள் குடும்பத்தார்கள் நண்பர்கள் என எல்லோரும் காரணம் உங்கள் எல்லோருக்கும் நன்றி என பேச்சை தொடங்குகிறார்.

பிறகு சந்தியா எழுதிக் கொடுத்த பேப்பரை பிரித்து பார்த்து அதை படித்த போது அதிர்ச்சி அடைகிறார். சந்தியாவுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை என தெரிந்து கொள்கிறார். இதைப் படித்த சரவணன் அப்படியே சிலை போல் நிற்க கீழே இருந்த குடும்பத்தினர் சரவணனுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி நிற்கிறான் என அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani2 Serial Episode Update 02.03.22
Raja Rani2 Serial Episode Update 02.03.22