தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியா போலீசாக பயிற்சிக்கு செல்ல வீட்டில் காணாமல் போன ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை தேடி தர வேண்டும் என சிவகாமி கண்டிஷன் போட சந்தியா ஒரு வழியாக அந்த பணத்தை திருடியது ஆதி தான் என கண்டுபிடிக்கிறாள்.
இதனையடுத்து ஆதி இந்த விஷயத்தை வீட்டில் சொன்னால் கல்யாணத்தை நிறுத்தி விடுவார்கள் என கெஞ்ச சந்தியா என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்போடு நேற்றைய சீரியல் எபிசோட் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் அந்த பணத்தை திருடியது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. தயவு செய்து என்னை போலீஸ் பயிற்சிக்கு அனுப்புங்கள் என சந்தியா சிவகாமியிடம் கேட்க கடைசியில் சரவணன் ஆதியை அடித்து இழுத்து வந்து அந்த ஐந்து லட்சம் பணத்தை இவன் தான் என அம்பலப்படுத்துகிறார்.
இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. அடுத்து சிவகாமி சந்தியா விஷயத்தில் என்ன முடிவு எடுக்க போகிறாள் என்ற கேள்வியோடு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
