raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சிவகாமி என் பொண்ணு என்கிட்ட கிடைச்சா தான் எனக்கு உயிரே வரும் என கடவுளை வேண்டிக் கொள்கிறார். அதன் பிறகு எல்லோரும் குடும்பத்தோடு கோவிலுக்கு கிளம்ப சக்கரை கோட்டு சூட்டில் புதிதாக வந்து நிற்க அது யாருடா வாங்கி கொடுத்தது என கேட்டேன் செல்வம் அண்ணா தான் வாங்கிக் கொடுத்தார் என கூறுகிறார்.
பிறகு எல்லோரும் கோவிலுக்கு கிளம்ப அந்த நேரத்தில் மயிலு மோர் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுக்கிறார். இந்த நேரத்தில் செந்தில் கைதவறி சக்கரை மோரை கோட் மீது கொட்டிக் கொள்கிறார். பிறகு சந்தியா சக்கரையை அதை வைத்து துடைத்துவிட அதில் வெடிகுண்டு இருப்பதால் செல்வன் நான் பார்த்துக்கொள்கிறேன் என சர்க்கரையை பிடித்துக் கொள்கிறார். சந்தியா பரவாயில்லை என மீண்டும் சர்க்கரையை தன் பக்கம் இழுக்க செல்வம் வேண்டாமே உங்களுடைய துணி அழுக்காகி விடும் நான் தொலைத்து விடுகிறேன் என கூறி தன்னுடைய டவலை வைத்து துடைக்கிறார். இப்ப பாருங்க போயிடுச்சு என சொல்ல இல்லை போகலை என சந்தியா நான் சுத்தம் செய்வதாக சொல்ல இல்ல நான் சுத்தம் செய்து கூட்டிட்டு வரேன் என செல்வம் கூறுகிறார்.
சரி என சொல்லி விட்டு எல்லோரும் குடும்பத்தோடு கோவிலுக்கு கிளம்பி விடுகின்றனர். பிறகு கடைக்கு வந்த செல்வம் தன்னுடைய அமைப்பினருக்கு போன் செய்து பார்வதி தயாராக இருக்கிறாளா? அவளைக் கூட்டிச் சென்று கூட்டத்தில் இறக்கி விட்டு விடு. அவ அவளுடைய குடும்பத்தாரை தேடி அலைவா, அவர்களுடைய குடும்பமும் பார்வதியை தேடும் போலீசும் பார்வதி மீதுதான் கண்ணாக இருப்பார்கள். நான் சர்க்கரைக்கு மனித வெடிகுண்டு கோட்டை போட்டு கூட்டத்துக்குள் இறக்கிவிட்டு விட்டேன் என கூறுகிறார்.
இந்த பக்கம் சந்தியா சரவணன் பாஸ்கர் எல்லோரும் ஒன்றாக கோவிலுக்குச் செல்ல அப்போது கான்ஸ்டபிள் ஒருவர் வந்து உங்களை இன்ஸ்பெக்டர் பார்க்க வேண்டும் என சொன்னதாக சந்தியாவை அழைத்து செல்கிறார். பிறகு சந்தேகப்படும்படியாக ஏதாவது நடந்ததா? பார்வதி பற்றிய விஷயம் உங்கள் குடும்பத்தாருக்கும் தெரியுமா எனக் கேட்ட யாருக்கும் எதுவும் தெரியாது என்று என்னுடைய கணவர் சரவணன் இடம் கூட இதை சொல்லவில்லை என கூறுகிறார். ஆனால் எப்போது என்ன நடக்கும் என ஒரே பதற்றமாக இருக்கிறது என கூறுகிறார்.
அதன்பிறகு சந்தியா சரவணன் பாஸ்கர் செந்தில் என எல்லோருமே தனியாக அழைத்துச் சென்று பார்வதி பற்றி முக்கியமான விஷயத்தில் சொல்லப் போவதாகக் கூறுகிறார். சரவணன் உட்பட எல்லோரும் பதற்றமாக பார்வதியை தீவிரவாத கும்பல் கடத்தி வைத்திருப்பதாக சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…
கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…