Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சரவணன் வீட்டிற்கு வந்த செல்வம்.. செல்வத்திடம் சவால் விட்ட சந்தியா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

Raja Rani 2 Serial Episode Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இத சீரியலில் இன்றைய எபிசோட்டில் சரவணன் போலீஸார் நடத்த உள்ள பங்ஷன் குறித்து பேச அர்ச்சனா சந்தியா பண்ணுது பெரிய வேலைதான் ஆனால் செல்வத்தோடு ஆளுங்க வெளியில தான இருக்காங்க நாம இந்த விழாவுக்கு போனா அவங்ககிட்ட நம்பளே போய் மாட்டுற மாதிரி ஆகாதா? என சொன்னேன் சிவகாமி இதுதான் வாய்ப்பு என்று இந்த நிகழ்ச்சிக்கு யாரும் போக வேண்டாம் என கூறுகிறார். ஆனால் சரவணன் கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என பேச சிவகாமி எழுந்து உள்ளே சென்று விடுகிறார்.

இந்த நேரத்தில் திடீரென வீட்டுக்கு போலீஸ் வந்து செல்வம் ஜெயிலில் இருந்து தப்பி விட்டதாக கூறுகின்றனர். உஷாராக இருக்கும்படி தெரிவித்துவிட்டு செல்கின்றனர். பிறகு சந்தியா நிகழ்ச்சிக்கு போகாமல் இருப்பது தான் சரி அத்தைக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என முடிவு செய்ய இந்த நேரத்தில் சரவணன் புடவை ஒன்றை வாங்கி வந்து நிகழ்ச்சிக்கு கட்டாயம் போக வேண்டும் என கூறுகிறார்.

இரவு நேரத்தில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது செல்வன் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைய சத்தம் கேட்டு சந்தியா எழுந்து ஒரு பக்கம் தேட செல்வம் ஒரு பக்கம் சந்தியாவை தேட பிறகு இருவரும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்கின்றனர். செல்வம் சந்தியாவிடம் உன்னை கொல்லாமல் விடமாட்டேன். இந்த பார்வதியும் உயிரோட இருக்க மாட்டா சவால் விட சந்தியா பதிலுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று பேசிக்கொண்டே போலீசுக்கு போன் போட்டு விடுகிறார்.

போலீஸ் வண்டியின் சத்தம் கேட்டதும் அலறி அடித்துக்கொண்டு செல்வம் சந்தியாவை பிடித்து தள்ளி விட்டு தப்பித்து ஓடுகிறார். பிறகு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஓடி வந்து என்னாச்சி அதைக் கேட்க போலீஸ் வண்டி சத்தம் கேட்டு எழுந்து வந்ததாக சந்தியா சொல்லி சமாளிக்க போலீசார் கதவை தட்ட பிறகு சந்தியா சைகை காட்ட அவர்கள் இந்த வழியாக ரவுண்டு வந்ததாகக் கூறுகின்றனர். செல்வம் இந்த ஊரில் தான் இருப்பேன் அவனைத் தேடி கண்டு பிடிங்க எனது சந்தியா போலீசுக்கு சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update
Raja Rani 2 Serial Episode Update