Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெஸ்ஸி அப்பாவால் அதிர்ச்சியில் ஆதி. அர்ச்சனாவுக்கு காத்திருக்கும் ஆப்பு.இன்றைய ராஜா ராணி எபிசோட்.

raja-rani-2 serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஆதி ஜெசி வீட்டுக்குச் சென்று பிசினஸ் இன்வெஸ்ட்மென்ட் செய்வதற்காக 2 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என சொல்ல ஜெசி யின் அப்பா அவ்வளவு பணம் இப்போ என்கிட்ட இல்லையே என கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடையும் ஆதி உங்களத்தான் மலைப்போல நம்பி வந்திருக்கேன் மாமா என சொல்ல ஒரு வழி இருக்கு ஜெசி பேர்ல 2 லட்சம் ரூபாய் பணம் போட்டு வச்சிருக்கோம். அது எடுத்துக்கறீங்களா என கேட்க ஆதி சந்தோஷமாக ஜெஸ்ஸியோட பணம் தானே ஓகே குடுங்க என சொல்ல அதுல ஒரு சிக்கல் இருக்கு அது ஜாயின்ட் அக்கவுண்ட் ஜெஸ்ஸி கையெழுத்து போட்டா தான் பணம் எடுக்க முடியும். நான் வேணும்னா செக் போட்டு புக்கையும் உங்ககிட்ட தரேன் நீங்க ஜெசி கிட்ட கையெழுத்து வாங்கி பணத்தை எடுத்துக்கோங்க என சொல்ல ஆதி அய்யய்யோ வேண்டாம் ஜெசிக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிடும் என சொல்லி நான் பார்த்துக்கிறேன் என கிளம்பி செல்கிறார்.

பிறகு ஜெஸ்ஸியின் அம்மா ஏன் அப்படி சொன்னீங்க என கேட்க ஆதி பண்றது ஏதோ தப்பா இருக்கு அவர் உண்மையாகவே நல்ல விஷயத்துக்காக பணம் கேட்டால் ஜெசி கிட்ட சொல்லி அவ மூலமா கேட்கட்டும் என கூறுகிறார். அதன் பிறகு சரவணன் கடையில் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற எண்ணெயில் வேலையை தொடங்க அந்த எண்ணெய் கலப்படமானது என தெரியவந்து அதை சமைக்காமல் ஓரமாக எடுத்து வைக்கிறார்.

இந்த நேரத்தில் திடீரென உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைக்கு வந்து சோதனை செய்ய அப்போது எண்ணெயில் கலப்படம் இருப்பதாக சொல்லி சரவணன் கைது செய்ய சர்க்கரை இந்த விஷயத்தை வீட்டில் ஓடிப் போய் அழுது கொண்டே சொல்ல அனைவரும் போய் ஸ்டேஷனுக்கு வர அர்ச்சனா சந்தோஷப்படுகிறார்.

சங்கத் தலைவர்கள் சரவணன் குடும்பத்தினர் என எல்லோரும் ஸ்டேஷனுக்கு வந்து சரவணன் எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டான் என பேசிக் கொண்டிருக்கும்போது சரவணன் அந்த எண்ணெய் கலப்படம் தான் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அர்ச்சனா என்ன உண்மையை ஒத்துக்கிட்டாரு இதுல ஏதாவது பிளான் இருக்கா என பயப்படுகிறார் ‌‌இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja-rani-2 serial episode-update
raja-rani-2 serial episode-update