Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவை திட்டி தீர்க்கும் கௌரி மேடம். வருத்தத்தில் சிவகாமி. இன்றைய ராஜா ராணி2 எபிசோட்

raja rani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சிவகாமி வீட்டிற்கு வந்துள்ள அர்ச்சனாவின் குடும்பத்தினர் பெயர் வைக்கும் பங்க்ஷன் பற்றி பேச வீட்டிலேயே கிராண்டாக வைக்கலாம் என முடிவெடுக்கின்றனர். சொந்தக்காரர்கள் எல்லோரும் வரவேண்டும் என அர்ச்சனாவின் அம்மா சொல்ல கண்டிப்பாக எல்லோரும் வருவாங்க என சிவகாமி பதில் கூற அர்ச்சனா சந்தியா வருவாளா என கேட்க சந்தியா கண்டிப்பாக வருவா, அவள ரெண்டு நாள் லீவ் கேட்டு வர சொல்லு என சரவணனுக்கு கட்டளையிடுகிறார்.

இதையடுத்து சரவணன் சந்தியாவுக்கு போன் போட்டு இந்த விஷயத்தை சொல்ல சந்தியா இப்ப இருக்க சூழ்நிலையில் கண்டிப்பாக லீவ் கிடைக்காது என கூறுகிறார். பிறகு சரவணன் கொஞ்சம் பேசி பாருங்க என சொல்ல சந்தியாவும் சரியென கூற அப்போது வரும் சேத்தன் மற்றும் ஜோதி இருவரும் நடந்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்க சந்தியா ஊருக்கு போக வேண்டிய விஷயத்தை சொல்ல நேரடியா கேட்டு பாரு கிடைச்சா சந்தோசம் கிடைக்கலைன்னா விட்டுவிடலாம் என சொல்ல சந்தியா லீவு கேட்க கௌரி மேடம் சென்று சந்திக்கிறார்.

சந்தியாவை பார்த்ததும் டென்ஷனாகும் கௌரி மேடம் இரண்டு நாள் லீவ் வேண்டும் என கேட்டதும் நீ பண்ணி வச்சிருக்க வேலைக்கு உனக்கு என்ன பனிஷ்மெண்ட் கிடைக்கும்னு தெரியல இதுல உனக்கு லீவ் வேண்டுமா? லீவ் எல்லாம் கொடுக்க முடியாது என கட் அண்ட் ரைட்டாக சொல்வது மட்டுமல்லாமல் ஐபிஎஸ் ஆக நீ எல்லாம் தகுதியே கிடையாது என திட்டி தீர்க்கிறார்.

அதன் பின்னர் சந்தியா சரவணனுக்கு ஃபோன் போட்டு நடந்த விஷயத்தை சொல்ல அவர் வருத்தப்பட இதை ஒட்டுக்கேட்ட சிவகாமி தன்னுடைய கணவரிடம் சென்று சந்தியா பெயர் வைக்கும் விழாவுக்கு வரமாட்டா போல சரவணனிடம் அவ பேசிகிட்டு இருந்ததை நான் கேட்டேன் என சொல்லி வருத்தப்படுகிறார். சந்தியா வரலனா கூட பரவால்ல ஆனா அவ எப்படியாவது ஜெயிச்சு அந்த கோப்பையை வாங்கி நம்ம ஊர்ல போஸ்டிங் வாங்கணும். அதுதான் எனக்கு முக்கியம் என சொல்ல ரவி கண்டிப்பா சந்தியா ஜெயிப்பா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என சொல்ல அதைக்கேட்டு சிவகாமி கடவுளிடம் வேண்டுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja rani 2 serial episode update
raja rani 2 serial episode update