raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் இந்த பக்கம் சந்தியா கௌரி மேடம் சந்தித்து மேடம் நான் வீட்டுக்கு கிளம்புறேன் வீட்ல இருக்கேன் உங்களுக்கு சொல்லி இருக்கேன் அவங்க கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க என சொல்ல கௌரி மேடம் முதல்ல இத என்கிட்ட சொல்லி இருக்கணும். நீங்க கர்ப்பமாய் இருந்தா கூட அவ்வளவு சீக்கிரமாக போயிட முடியாது ஃபார்மாலிட்டிஸ் இருக்கு. பிராப்ரான மெடிக்கல் செர்டிபிகேட் கொடுக்கணும் அதற்கான வேலையை போய் பாருங்க என சொல்லி அனுப்பி வைக்கிறார்.
சந்தியா அடுத்து மெடிக்கல் டெஸ்ட் எடுத்து ரிசல்ட் கேட்க ரிசல்ட் நேரடியாக உயர் அதிகாரிக்கு அனுப்பப்படும் என கூறுகின்றனர். இந்த பக்கம் அர்ச்சனா குழந்தையை கொஞ்சி கொண்டிருக்க அங்கு வரும் செந்தில் குழந்தையை கொஞ்சி விட்டு இதுவே பெண்ணாக இருந்திருந்தால் குடும்பமே கொண்டாடி இருக்கும் என சொல்ல அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார். செந்தில் வெளியே போனதும் டேய் பக்கத்து வீட்டு பொண்ணுக்கு பிறந்த பையா நான் ஒரு திட்டம் போட்டேன். ஆனால் அது இப்படி சொதப்பிடுச்சு, சரி விடு உன்னை வைத்து சொத்துல பாதி எழுதி வாங்கிடுவேன் என சொல்கிறார்.
பின்னர் சரவணன் சிவகாமி என எல்லோரும் சந்தியாவை கூட்டிட்டு வர சென்னைக்கு கிளம்பி சென்ற நிலையில் அர்ச்சனாவுக்கு அவரது அம்மாவிடமிருந்து போன் வர சந்தியா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார். பிறகு அவருடைய அம்மா நான் ஒரு ஜோசியரை பார்த்து இருந்தேன் அவர் உங்களுடைய பொண்ணுக்கு கண்டிப்பாக பொண்ணு தான் பிறக்கும் என்று சொன்னாங்க. ஆனால் பையன் பிறந்துட்டான் என சொல்ல அர்ச்சனா மழுப்பி விடுகிறார்.
பிறகு சிவகாமி சரவணன் மற்றும் அவருடைய அப்பா என மூவரும் வந்து சந்தியாவை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். சரவணன் மட்டும் கொஞ்சம் வருத்தப்பட சந்தியா நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…