Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவை பார்த்து வயிறு எரியும் அர்ச்சனா.. கடுப்பான செந்தில்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja rani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஜெஸ்ஸி வீட்டார் குடும்பத்திற்கு வந்திருக்க ஆதியின் முகம் டல்லாக இருப்பதை பார்த்து என்னாச்சு என கேட்க குடும்பத்தார் எதையோ சொல்லி சமாளிக்கின்றனர்.

அடுத்ததாக சரவணன் வெளியே திண்ணையில் உட்கார்ந்து இருக்க சந்தியா அவரை பார்த்துக்கொண்டே நடந்து சென்று கீழே விழ போக அவளை தாங்கி பிடிக்கிறார் சரவணன். பிறகு சந்தியாவின் காலை அமுக்கிவிட்டு போலீஸ் ட்ரைனிங் குறித்து பேசுகின்றனர். சரவணன் உங்களோட கண்டிப்பா நானும் வருவேன். உங்களுக்கு டீ காபி போட்டு கொடுத்து காலையில் நேரத்துக்கு எழுப்பி விட்டு நீங்கள் பயிற்சி முடித்து வருவதற்குள் சாப்பாடு தயார் செய்து வைத்திருப்பேன் என சொல்ல சந்தியா கேட்க நல்லா இருக்கு என கூறுகிறார்.

இவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்வதை பார்த்து வயிறு எரியும் அர்ச்சனா ரூமுக்கு சென்று செந்தில் தூங்கிக் கொண்டிருக்க அவனை எழுப்பி கால் அமுக்கி விட சொல்கிறார். பிறகு சந்தியா போலீஸ் ஆயிட்டா எல்லாரும் அவளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பா என வழக்கம் போல அர்ச்சனா பேச்சை தொடங்க செந்தில் கடுப்பாகிறார்.

அடுத்து ஆதிக்கு நலங்கு வைக்கும் பங்க்ஷன் நடக்கிறது. சிவகாமி சந்தியாவை நலங்குவை தொடங்கி வைக்க சொல்ல அர்ச்சனா கடுப்பாகிறார். பிறகு இந்த பங்க்ஷன் நல்லபடியாக நடந்து முடிந்து ரிசப்ஷன் தொடங்குகிறது. அர்ச்சனா அவங்களுக்கு அவங்களுக்கு சம்பிரதாயங்கள் முறையெல்லாம் தெரியாது, சீர் சனம் எல்லாம் எப்படி செய்வாங்க என் பேச்சை ஆரம்பிக்க சிவகாமி நாம இத முன்கூட்டியே அவங்ககிட்ட சொல்லி இருக்கணும் என பேசுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

raja rani 2 serial episode update
raja rani 2 serial episode update