Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவிற்கு சிவகாமி கொடுத்த ஷாக்.. குழப்பத்தில் சரவணன்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja rani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு ஜெஸ்ஸி தனக்கு படிக்கும் ஐடியா இல்லை என சொல்ல சிவகாமி அப்பா என பெருமூச்சு விட பிறகு என்ன ஆச்சு என ஜெஸ்ஸியின் அப்பா கேட்க ஆதியும் வேலைக்கு போறான் இவளும் வேலைக்கு போயிட்டா குடும்பத்தை யார் கவனிக்கிறது என சொல்ல உடனே அவர் அப்படியே விட்டிட முடியாது ஜெஸ்ஸிக்கு பியூட்டிஷியன் தெரியும். ஒரு கடை வச்சு கொடுத்தா அவ அத பாத்துக்குவா என சொல்கிறார். ஆதி எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என சொல்ல சிவகாமி வேறு வழியே இல்லாமல் சரி என சொல்கிறார்.

நிச்சயதார்த்தம் குறித்து பேச்சை தொடங்க சிவகாமி நாளை மறுநாள் வைத்துக் கொள்ளலாம் என சொல்லி பிறகு இந்த கல்யாண வேலை முழுக்கையும் சந்தியா தான் பார்க்கணும் என கூறுகிறார். இதனால் சரவணன் அதிர்ச்சியாக அர்ச்சனா சந்தோஷப்படுகிறார். பிறகு சரவணன் இது பற்றி அம்மாவிடம் பேச சந்தியா நான் பார்த்துக்கிறேன் விடுங்க என கூறி விடுகிறார்.

அடுத்து சரவணன் சந்தியா கல்யாணத்திற்கு என்னவெல்லாம் தேவை என லிஸ்டு போடுகின்றனர். ட்ரைனிங்கு கூப்பிட்டா இந்த நேரத்தில் எப்படி போவது என சரவணன் கவலைப்பட சந்தியா அந்த நேரத்தில் சமாளித்துக் கொள்ளலாம் அது நடக்கும் போது பார்க்கலாம் என கூறுகிறார். இந்த பக்கம் அர்ச்சனா செந்திலிடம் அத்தை சந்தியா போலீஸ் ட்ரைனிங் போகக்கூடாது என்பதற்காகத்தான் இந்த கல்யாணப் பொறுப்பை கொடுத்து பிளாக் பண்ணி இருக்காங்க என சொல்கிறார். பக்கத்தில் விற்பனைக்கு வரும் கடையை வாங்குவது பற்றி யோசிங்க பணத்தை எப்படி ரெடி பண்ணுவது என்று அம்மாவுடன் பேசுங்க என சொல்ல செந்தில் யோசிக்கிறான்.

பிறகு சந்தியா சக்கரைக்கு பாடம் சொல்லிக் கொடுக்க அவன் புத்தகத்திலிருந்து ஒரு பொருளைப் பார்த்து சந்தியா ஷாக்காகிறார். பணத்தை கட்டு கட்டா பிரிப்பதற்கு தேவைப்படுவது இது, இது எப்படி இவனிடம் வந்தது என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 raja rani 2 serial episode update

raja rani 2 serial episode update