raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சிவகாமி என் புருஷனை காப்பாத்தி கொடுத்துட்ட நான் உனக்கு எப்படி நன்றி சொல்ல போறேனே தெரியல என கூறுகிறார். உடனே அங்கிருந்த நர்ஸ் நீங்க நன்றி சொல்ல வேண்டியது டாக்டருக்கு கடவுளுக்கும் இல்லை அங்க நிக்கிற அந்த பொண்ணுக்கு தான். அந்த பொண்ணு மட்டும் சரியான நேரத்தில் வந்து ரத்தம் கொடுக்கவில்லை என்றால் கடவுளை நினைச்சிருந்தா கூட அவரை காப்பாற்றி இருக்க முடியாது என சொல்ல சிவகாமி ஜெஸ்ஸியை கையெடுத்து கும்பிடுகிறார்.
அடுத்ததாக வள்ளி பாட்டி அவர்களை உள்ளே அழைக்க அப்போது சந்தியா இந்த நேரத்தில் இதை பேசுறது சரியா இருக்காது தான் ஆனால் பேச வேண்டிய கட்டாயம் என சொல்லி ரத்தம் கொடுக்கும்போது அவளுடைய ஜாதி மதம் எதுவும் நமக்கு தெரியல ஆனா அதுவே அவள் நம்முடைய வீட்டுக்கு மருமகளா வரணும்னா இந்த தடையெல்லாம் தேவையா? அவளுடைய ரத்தம் நம்ப உடம்புல ஓடலாம் ஆனால் அவ நம்ம வீட்ல வாழக்கூடாதா? என கேள்வி கேட்க வழிபாட்டில் வயசு தான் ஆச்சு தவிர எனக்கு அறிவு வளரல, இப்படி ஒரு தங்கமான பொண்ணை இவ்வளவு கஷ்டப்படுத்திட்டேனே என வருத்தப்படுகிறார். சிவகாமியை தடுத்தாலும் நீதான் என் வீட்டோட மருமக அதை யாராலையும் மாற்ற முடியாது என சொல்ல உடனே சிவகாமி நான் ஒன்னும் அப்படி கல்நெஞ்சகாரி இல்லை என கூறுகிறார்.
என் தாலியை காப்பாத்தி கொடுத்த ஜெஸ்ஸி என் வீட்டோட மருமகளா ஏத்துக்க எனக்கு முழு சம்மதம் எந்த தடையும் கிடையாது என கூறுகிறார். பிறகு எஸ்சி மீட்டார் அவர் குணமாகி வீட்டுக்கு வரட்டும் அதுக்கப்புறம் கல்யாண விஷயம் பற்றி பேசிக் கொள்ளலாம் என சொல்ல அப்படின்னா இப்பவே பேசிடலாம் என சரவணன் அவருடைய அப்பாவிடம் சொல்ல அவர் தலையில் இருந்த கட்டை அவிழ்த்து போடுகிறார். உங்க எல்லாருடைய மனதையும் மாத்த நானும் அப்பாவும் போட்ட டிராமா தான் இது என சரவணன் சொல்ல அனைவரும் ஷாக்காக்கின்றனர்.
இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காக இப்படி செய்ததால் மன்னித்து விடுகின்றனர். பிறகு சரவணன் சந்தியாவிடம் இது பற்றி பேசிக் கொண்டிருக்க அதன் பின்னர் ஜெசி வீட்டார் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களை வரவேற்று காபி கொடுத்து பேசுகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…