raja rani 2 serial episode update
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஆதி திசையை பார்த்து நீ கர்ப்பமான விஷயத்தை முதலில் என்னிடம் சொல்லி இருக்கணும். இதோட உனக்கும் எனக்கும் ஆனால் சேப்டர் க்ளோஸ். நீ உன் வழியை பாரு நான் என் வழிய பார்த்து போய்கிட்டே இருக்கேன் என சொல்ல ஜெசி அதிர்ச்சியாகிறார். அப்படியெல்லாம் ஏமாத்திட்டு உன்னால போயிட முடியாது என கேசி சொல்ல உன்னால என்ன பண்ண முடியும் என்ன ஆதாரம் இருக்கு என டயலாக் பேசுகிறான். சந்தியா எனக்காக உதவி பண்ணுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு என ஜெசி சொல்ல போடி என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.
இதனால் ஜெசி அப்பாவுக்கு போன் போட்டு அடுத்ததாக சட்டப்படி மூவ் பண்ணலாம் என கூறுகிறார். பிறகு மூவரும் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல முடிவெடுக்கின்றனர். ஜெசி சந்தியாவுக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்லி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போவதாக சொல்கிறார். இதனால் அதிர்ச்சியான சந்தியா உடனடியாக கிளம்பி ஜெஸ்ஸி பார்க்க போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்.
செல்லும் போது சிவகாமி எங்க போற என கேட்க ஒரு வழியாக இதை சமாளித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்ப சரவணன் சந்தேகத்துடன் பின் தொடர போலீசில் புகார் அளித்து ஆதியை கைது செய்யும் அளவிற்கு சென்று விட்ட நிலையில் சந்தியா அவர்களிடம் கெஞ்சி கால அவகாசம் கேட்கிறார். ஒரு கட்டத்தில் அவர்களும் சரியென ஒத்துக்கொள்ள பிறகு சரவணன் சந்தியாவுக்கு நன்றி கூறுகிறான்.
பிறகு இருவரும் வீட்டுக்கு வர வீட்டில் வள்ளி பாட்டி இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட ஆதிக்கு கல்யாணம் பண்ண வேண்டும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அடுத்து வெளியான ப்ரோமோவில் இன்னும் ஜெஸ்ஸி பிரச்சனை முடியல என சந்தியா சொல்ல நீயே இங்கு நடக்கிற எல்லாத்தையும் அவங்க வீட்ல போட்டு கொடுப்ப போல என வள்ளி பேசுகிறார்.
மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1
பைசன் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…