Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எக்ஸாம் எழுதிய சந்தியா.. திட்டு வாங்கிய அர்ச்சனா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja rani 2 serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் பெண்களை பரிசோதனை செய்வதாக சொல்லி ஒரு பெண்ணை ரூமுக்குள் அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டு அதை வீடியோ எடுத்ததால் அந்த பெண் வெளியே வந்து அழுது புலம்ப சந்தியா இது குறித்து நீதி கேட்க அதன் பின்னர் உயர் அதிகாரி வந்து மன்னிப்பு கேட்டு அனைவரையும் பரிச்சை எழுத உள்ளே அனுப்புகிறார்.

பிறகு சந்தியா ரூமுக்குள் பயிற்சி எழுதி கொண்டிருக்கிற சரவணன் சாமியிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் சிவகாமி வீட்டிற்கு அர்ச்சனாவின் குடும்பத்தார் வந்து சீமந்தம் நடத்துவது பற்றி பேசுகின்றனர். மண்டபத்தில் நடத்துவதாக அவர்கள் சொல்ல சிவகாமியின் மாமியார் அலைச்சல் எதுக்கு? வீட்டிலேயே நடத்தலாம் என சொல்ல எல்லோரும் சரியென்ன சொல்லி விடுகின்றனர்.

இந்த பக்கம் பரிட்சை முடிந்து வெளியே வந்த சந்தியா சரவணனிடம் எக்ஸாம் சூப்பரா எழுதி இருப்பதாக சொல்லி நடந்த பிரச்சனை குறித்து பேசுகிறார். அடுத்ததாக இருவரும் வீட்டிற்கு கிளம்பி வர இந்த பக்கம் அர்ச்சனா வளைகாப்பு மண்டபத்தில் நடத்தினால் கிராண்டா இருக்கும் என சொல்ல அப்போ செலவு எல்லாம் உன் புருஷனோடது தான் சரியா இருக்கு அதெல்லாம் வேண்டாம் நான் பேசுனதையே மறந்திடுங்கள் என கூறுகிறார்.

அதன் பிறகு பக்கத்து வீட்டு நபர் ஒருவர் வந்து என் பொண்ணுக்கும் சம்பந்தம் ரெண்டு பேரும் சேர்ந்து மண்டபத்தில் வைக்கலாம் என சொல்ல சிவகாமி நாங்க வீட்டிலேயே வைப்பதாக முடிவு செய்து விட்டோம் என சொல்கிறார். அர்ச்சனா உங்க பொண்ணுக்கு பொண்ணு தான் பொறக்கும் வயிறு ரொம்ப பெருசா இருக்கு என சொல்ல உனக்கு என்ன குழந்தை பிறக்கும் என அந்த பெண்மணி கேட்க எனக்கு கண்டிப்பா ஆண் குழந்தை தான் என கூறுகிறார். இதை கேட்ட சிவகாமி பொறக்கிறது எந்த குழந்தையா இருந்தா என்ன? எதுவாக இருந்தாலும் அது இந்த குடும்பத்தோட வாரிசு என அர்ச்சனாவை திட்டுகிறார். பிறகு சந்தியா சரவணன் வீட்டுக்கு வந்து எக்ஸாம் நல்லபடியாக எழுதியதாக சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். அர்ச்சனா கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 raja rani 2 serial episode update

raja rani 2 serial episode update